என்ன பண்ணீங்க? எவ்வளவு செலவு? வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமாவளவன் பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியமானது என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தெரிவிக்கையில், "சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் என்றால் வெளியிடலாம். 

மழை வெள்ள தடுப்புக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது, வடிகால் அமைக்க எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டு உள்ளது என்பதை மக்களின் பார்வைக்கு தெரியப்படுத்துவது அவசியமானது.

பேரிடர் நிவாரண நிதியாக தமிழக முதலமைச்சர் ரூ.5,000 கோடி வேண்டும் என்று கோரி இருந்தார். ஆனால் மத்திய அரசு ரூ.1,000 கோடி மட்டுமே வழங்கி இருக்கிறது. ஐந்தில் ஒரு பங்கு என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

மத்திய அரசுடன் நட்புறவுடன் இருக்கும் அ.தி.மு.க.வினர் மத்திய அரசு அல்லது பிரதமரை வலியுறுத்தி ரூ.5,000 கோடி பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viduthalai Chiruthaigal Katchi Thirumavalavan MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->