தரமான சம்பவம்.. சவுக்கு சங்கரை அழைத்து செல்லும் பெண்‌ காவலர்கள்.!‌ - Seithipunal
Seithipunal


பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மற்றும் அவரைப் பேட்டி எடுத்த ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோரை தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவருக்கு வரும் மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று சவுக்கு சங்கரி பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து கைது செய்த திருச்சி சைபர் கிரைம் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை விசாரணைக்காக திருச்சி சைவர்கள் போலீசார் இன்று அழைத்துச் சென்றனர். 

பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய சவுக்கு சங்கரை பெண் காவலர் வைத்தே காவல்துறை வாகனத்தில் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சிக்கு போலீசார் அடித்து செல்கின்றனர். யாரை அவமானப்படுத்தி சவுக்கு சங்கர் பேசினாரோ அவர்களை வைத்தே அழைத்துச் செல்வதாக இணையதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women police escorted SavukkuShankar to Trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->