சூறாவளி புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - மக்களே உஷார்.!
air low pressure change strom
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப் பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இன்று அதிகாலை 1 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்தது. இது அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தப் புயலுக்கு பெங்கல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாக உள்ள 'பெங்கல் புயல்' சென்னையை நெருங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
English Summary
air low pressure change strom