அரபிக்கடலில் உருவான "பிபோர்ஜோய் புயல்"... 6 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுவடையும்...! வானிலை மையம்...!
Cyclone Biborjoi formed in Arabian Sea will intensify into a severe storm in 6 hours
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அடுத்த 6 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு "பிபோர்ஜோய்"என பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். மேலும் இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் 'பிபோர்ஜோய்' புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற உள்ளதாகவ இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயல் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலில் கோவாவுக்கு 900 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், வடக்கில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Cyclone Biborjoi formed in Arabian Sea will intensify into a severe storm in 6 hours