வங்க கடலின் மேல் சக்கரம்! காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா? வானிலை மையத்தில் அப்டேட்! - Seithipunal
Seithipunal


தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகளால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. 

அதே வேளையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. 

அதன்படி இன்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிய பிறகு வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Low pressure area formed in bay of Bengal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->