#Justin || அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் "இடியுடன் கூடிய மழை".! வானிலை ஆய்வு மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10 ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

இதையடுத்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Next 3 hours thunderstorm lightning with moderate rain in 21 districts of tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->