பலூசிஸ்தான் மாகாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் குட்டா நகர் பகுதியில் வழக்கம் போல் ஷப்சல் சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. அப்பொழுது எதிர்பாராதமாக சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையெறி வெடிகுண்டுகள் திடீரென்று வெடித்தன.

இந்த வெடி விபத்தில் அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ககான் பகுதியில் துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இடை-சேவை மக்கள் தொடர்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பலூசிஸ்தான் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த பல குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தலிபான்கள் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 died in blasts in different parts of Balochistan Pakistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->