அமெரிக்கா || குழந்தைகளை பயமுறுத்திய காப்பாளர்கள்..! அலறிய குழந்தை., பதறிய பெற்றோர்கள்..!
america Halloween celebrations child care center children fear
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலம் வாய்ந்தவை. அங்கு பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தது போல் பேய், பிசாசு மற்றும் விகார தோற்றம் கொண்ட வேஷங்களைப் போட்டு தெருக்களில் வலம் வருவார்கள்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி நாளில் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் ஆண், பெண் வேற்றுமையின்றி அனைவரும் பல்வேறு வேஷங்களை போட்டு மகிழ்வார்கள்.
அந்தவகையில், அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இதில், பல்வேறு தரப்பு மக்களும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிட்டு, அவர்களை காப்பகத்தில் விட்டு விட்டு வேலைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், அந்த காப்பகத்தில் உள்ள ஊழியர்கள், பேய் போன்ற வேடம் போட்டு கொண்டு, குழந்தைகளின் முன்னே சென்று அவர்களை பயமுறுத்தி உள்ளனர். அது விளையாட்டுக்காகவோ அல்லது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டனவா என்பது தெரியவில்லை.
அதேபோல், காலையில் சிற்றுண்டி சாப்பிட மேஜையில் அமர்ந்து இருந்த குழந்தைகளையும் ஊழியர்கள் பயமுறுத்தி உள்ளனர். இதனால், குழந்தைகள் பயத்தில் அலறியபடி இருந்துள்ளனர்.
இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காப்பக ஊழியர்கள் நான்கு பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
English Summary
america Halloween celebrations child care center children fear