காட்டுத் தீயை அணைக்க சர்வதேச நாடுகளிடம் உதவி கோரும் சிலி நாடு.! - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்க நாடான சிலியில் நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக நாடு முழுவதும் வெப்ப காற்றுகள் வீசி வருகின்றன. இதனால் தென்மேற்கு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள், விவசாய நிலங்கள், கிராமங்கள் என 150க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் மற்றும் தாவரங்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

இதுவரை 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புகள் தீயில் அழிந்துள்ளன. மேலும் நாடு முழுவதும் காட்டுத்தீல் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தீயை அணைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பிரேசில் நாடுகளின் ஹெலிகாப்டர்கள் மற்றும் உபகரணங்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்று வருகிறோம் என உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காட்டுத்தீ மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என உள்துறை அமைச்சர் தோஹா கோரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூலம் பல நாடுகள் மற்றும் சர்வதேச சேவை நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chile urges international aid to curb forest fires


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->