படை பலத்தை பயன்படுத்தும் முடிவை கைவிட மாட்டோம் - சீனா மிரட்டல் - Seithipunal
Seithipunal


தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக சீனா நினைத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி தைவானுக்கு  வருகை தந்து அதிபரை சந்தித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவானை சுற்றி சீனா போா்ப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்துவோம் என சீனா மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதையடுத்து தைவானுடன் அமைதியான மறு ஒருங்கிணைப்பை அடைய நேர்மையுடன், அமைதியான வழியில் சாத்தியமாக்க அதிகபட்ச முயற்சிகளை சீனா மேற்கொள்ளும் என்று சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாங்கள் படை பலத்தை பயன்படுத்தும் முடிவை கைவிட மாட்டோம் என்றும், வெளிநாடுகளின் குறுக்கீடு அல்லது பிரிவினைவாத குழுக்களின் தீவிர நடவடிக்கைக்கு படை பலத்தை பயன்படுத்தி பதிலளிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருப்போம் என்று சீனா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China will use forces to capture Taiwan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->