பாகிஸ்தானில் தொடரும் கனமழை.! வெள்ளத்தில் மூழ்கிய பலுசிஸ்தான் மாகாணம் - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக பலுசிஸ்தான், கைபர் கப்துவா மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் மாகாணம் மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர் கனமழையால் சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதையடுத்து கனமழை தொடங்கியதிலிருந்து இதுவரை 4000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனமழையால் இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பலுசிஸ்தான் மற்றும் கராச்சி பகுதியில் அரசாங்கம் வானிலை அவசரநிலையை அறிவித்துள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவ படையினர், மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வெள்ளத்தின் மத்தியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood causes severe damage to balochistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->