கிளியால் காயமடைந்த மருத்துவர்.! உரிமையாளருக்கு இரண்டு மாதம் சிறை.!
parrot owner two month jail for parrot attack docter in taiwan
மக்கள் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை செல்லப்பிராணியாக வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவற்றை தங்களது வீட்டில் ஒருவராக கருதி தேவையான அனைத்தையும் செய்து வளர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்தவர் ஹூவாங் என்பவர் கிளி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். இவர் தனது கிளியுடன் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார்.
அங்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் லின் என்பவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, ஹூவாங்கின் கிளி திடீரென பறந்து சென்று, மருத்துவர் லினின் முதுகில் உட்கார்ந்து இறக்கையை அசைத்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் திடீரென கீழே விழுந்தார். இதில் அவருடைய இடுப்பு எலும்பு முறிந்தது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவர் முழுமையாக குணம் அடைவதற்கு மூன்று மாதங்கள் ஆனது.
அதுமட்டுமல்லாமல், இந்த சம்பவத்தால் மருத்துவர் லின் ஆறு மாதங்கள் வரை வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வருமான ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மருத்துவர் லின் உரிய நிவாரணம் கேட்டு கிளியின் உரிமையாளர் ஹூவாங் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கிளியின் உரிமையாளரான ஹூவாங்குக்கு இரண்டு மாத சிறை தண்டனையும், 91,350 டாலர் அதாவது, சுமார் ரூ.74 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
English Summary
parrot owner two month jail for parrot attack docter in taiwan