ஆன்லைனில் பகுதி நேர வேலை : 26 லட்சத்தை இழந்த புதுவை மருத்துவக்கல்லூரி மாணவர்.!
puthuchery medical student loss money online part time job
ஆன்லைனில் பகுதி நேர வேலை : 26 லட்சத்தை இழந்த புதுவை மருத்துவக்கல்லூரி மாணவர்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிரியாரா கிராமத்தை சேர்ந்தவர் வேதபிரகாஷ். இவர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மரில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில், இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.
அந்த தகவலில் இணையதளத்தில் பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம். யூடிப் சேனல்களை லைக் செய்தால் ரூ.150 கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இஇதனை உண்மை என்று நம்பிய வேதபிரகாஷ் அந்த யூடிப் சேனலை லைக் செய்து போட்டோ எடுத்து குறுந்தகவல் வந்த எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.
உடனே வேதபிரகாஷின் வங்கி கணக்கில் ரூ.150 செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு கிரிப்டோ கரன்சி, பிட்காயின் டாஸ்க் முடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்ற செய்தி மீண்டும் வந்தது. இத்தனையும் உண்மை என்று நம்பிய அவர் சோதனை முறையில் ஆயிரம் ரூபாய் செலுத்தினார். டாஸ்க் முடிந்தவுடன் பிட்காயின் வேலட்டில் ஆயிரத்து முந்நூறு ரூபாய் வந்தது.
உடனே வேதபிரகாஷ் அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளார். இதனால் அந்த இணையதளத்தை முழுமையாக நம்பிய வேதபிரகாஷ் ரூ.26.30 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். அப்போது அவரது வேலட்டில் ரூ.36.34 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார்.
ஆனால், மேலும் கூடுதலாக பணம் முதலீடு செய்தால் தான் பணம் எடுக்க முடியும் என்றுத் தெரிவிக்கப்பட்டது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேதபிரகாஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
puthuchery medical student loss money online part time job