பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஷ் ஷெரீப் தேர்வு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தெரிவு செய்யபட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான்கான் அரசின் திறமையின்மை தான் காரணம் என எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் இம்ரான் கானின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.

கடந்த 3ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பளித்தது. இம்ரான்கான் அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் பாராளுமன்றம் கூடியது இதில் பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shabash Sharif elected new PM of Pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->