பாதுகாப்புத்துறை அமைச்சரை அதிரடியாக பதவிநீக்கம் செய்த இஸ்ரேல் பிரதமர்! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான், காசா  மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த யோவ் காலண்ட்டின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால், யோவ் காலண்ட்டை பதவிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த காட்ஸ், பாதுகாப்புத்துறை அமைச்சராக  பதவியேற்க உள்ளதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சராக கிதியோன் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The prime minister of israel dismissed the minister of defense


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->