மங்கோலியாவில் சோகம் : புயலில் சிக்கி 3 லட்சம் கால்நடைகள் பலி.!
three lakhs live stock died in mangolia for storm
மங்கோலியாவில் சோகம் : புயலில் சிக்கி 3 லட்சம் கால்நடைகள் பலி.!
ஆசிய நாடுகளில் ஒன்றான மங்கோலியாவில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த கனமழையால், சுக்பாதர் மற்றும் கென்டி உள்ளிட்ட மாகாணங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த புயல் காற்றால் அங்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அந்தப் பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் பல நகரங்கள் இருளில் மூழ்கின. இந்த நிலையில், கால்நடை மேய்ப்பதற்காகச் சென்ற சுமார் 130-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வந்தது.
அந்த தகவலின் படி மீட்பு படையினர் விரைந்துச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரைக்கும் 125 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் இறந்துள்ளதாகவும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், சுமார் 2.90 லட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
three lakhs live stock died in mangolia for storm