ஈரானில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து.! 17 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஈரானில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஈரானின் வட கிழக்கு நகரமான மஷ்ஹாத்தில் இருந்து 388 பயணிகளுடன் மத்திய நகரமான யாஸ்டுக்கு ரயில் சென்றது.

அப்பொழுது பாலைவன நகரமான தபாஸ் மற்றும் யாஸ்ட் நகரத்தை இணைக்கும் தடத்தில் ரயில் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ்களில் வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில், தண்டவாளத்திற்கு அருகில் இருந்த அகழ்வாராய்ச்சி இயந்திரத்தின் மீது மோதியதால் ரயில் தடம் புரண்டது என்று தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Train derailment in Iran


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->