ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் ஹெக்மத்யாரை கொல்ல முயற்சி.! 2 தீவிரவாதிகள் பலி
Two terrorist killed by Attempt to kill former Prime Minister in Afghanistan
ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யாரைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தருலமன் பகுதியில் உள்ள முன்னாள் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யாரின் அலுவலக கட்டிடம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
மேலும் தொழுகைக்காக ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் கூடியிருந்த மசூதிக்குள் சந்தேகிப்படும் வகையில் பயங்கரவாதிகள் சிலர், பர்தா அணிந்தபடி நுழைந்து ஹெக்மத்யாரை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இரண்டு தாக்குதல் தாக்குதல்காரர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் பர்தா அணிந்து முன்னாள் பிரதமரின் அலுவலக பகுதிக்குள் நுழைந்ததாகவும், ஆனால் அவர்கள் இலக்கை அடையவில்லை என்பதா தொழுகை நடந்து கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காபூலில் நடந்த இரண்டு தாக்குதல்களுக்கும் உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
English Summary
Two terrorist killed by Attempt to kill former Prime Minister in Afghanistan