போட்டியில் இருந்து விலக முடிவு! ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் இருந்துகொண்டே அதிபருக்கான கடமைகளை தொடர்ந்து செய்து வருவதாக தகவல் வழியாக உள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாசம் இறுதியில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் களம் இறங்குகிறார். இந்த நிலையில் ஜோ பைடனுக்கு கடந்த புதன்கிழமை அன்று கொரோனா தொற்று உறுதியானது அடுத்து அவர் வீட்டில் தன்னை தடுமைப்படுத்திக் கொண்டார்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஜோ பைடன் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவதாகவும், வீட்டிலிருந்து கொண்டே அதிபருக்கான கடமைகளை தொடர்கிறார் என்று வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வரும் ஜோ பைடன் கொரோனாவுக்கான ஆறாவது டோஸ் கோவிட் எதிர்ப்பு மாத்திரையை உட்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு உடல் அளவு. இரும்பல். தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச விகிதம், வெப்பநிலை அனைத்தும் சாதரண வரம்புக்குள் வந்துள்ளதாக மருத்துவர் கேவின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னதாக அதிபர் ஜோ பைடன் அளித்த பேட்டியில், தனக்கு ஏதேனும் அவசர மருத்துவ கோளாறு ஏற்படும் பட்சத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

US President Joe Biden is confirmed to be infected with Corona


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->