ராஞ்சியில் பேருந்து கவிழ்ந்து விபத்து...  நூலிழையில் தப்பித்த மாணவர்கள் ! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டம்  மந்தர் என்ற கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி இருக்கிறது. இங்கு   நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.  தினந்தோறும் வீடுகளில் இருந்து பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச்செல்வது வழக்கம். அந்த வகையில், இன்று காலையும்  30 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. 

பேருந்து பள்ளியை நெருங்கிய நிலையில், 100 மீட்டர் தொலைவில் திருப்பத்தில் பேருந்து திரும்பும்போது பஸ் திடீரென தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்தில்  பயணம் செய்த 15 மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து,  அருகில் இருந்தவர்கள்  விபத்தில் சிக்கிய மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்  என்று மந்தர் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் ராகுல் தெரிவித்தார். 

இந்த விபத்தால் ஒரு மாணவருக்கு  மட்டும் தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டு மேல் சிகிச்சையில் உள்ளார்.  விபத்தினால் அதிர்ஷ்டவசமாக எந்த மாணவரின் உயிருக்கும் ஆபத்தில்லை  என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students great escape from accident in ranji


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->