பெருங்காயத் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் உடல் எடையைக் குறைப்பது பெரும் சவாலாக உள்ளது. அதனால், மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றாக பெருங்காயத்தூள் தண்ணீர் உள்ளது. இந்தப் பெருங்காயத்தூள் தண்ணீரைக் குடிப்பதால் என்ன நன்மை என்று பார்ப்போம்.

* பெருங்காய நீர் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இவை விரைவாக நடப்பதன் விளைவாக எடைகுறைப்பு நிகழ்கிறது. ஏனெனன்றால் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகமாக நிகழும்போது உணவை விரைவாக செரிமானம் அடைகிறது. நாம் சாப்பிடும் உணவு நல்ல விதமாக செரிமானம் அடைந்தாலே எடை குறைப்புக்கு எளிதாகும்.

* உடலில் வயதானால் ஏற்படும் சுருக்கங்கள் தவிர்க்கப்பட்டு நாள்தோறும் பெருங்காயம் கலந்த தண்ணீர் குடிப்பதால் உங்கள் சருமங்கள் பளபளப்பாகும். இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமங்களில் எந்த சேதமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. அத்துடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதன் மூலம் சருமங்களில் ஏற்படும் சிதைவைத் தடுக்கிறது.

* பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக பெருங்காயம் கலந்த நீரை பருகலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சளி ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன், சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும் இருமல், மூக்கில் சளி வடிதல், அதிகப்படியான சளி போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

* பெண்களுக்கு மாதவிலக்கு நாள்களில் ஏற்படும் அதீத வலியை குறைப்பதற்கான அருமருந்தாக இந்த பெருங்காயம் கலந்த நீர் உள்ளது. மற்ற மருந்துகளைக் காட்டிலும் மிகவும் விரைவாக மாதவிலக்கு சமயங்களில் ஏற்படும் பிடிப்புகள், வலியை உடனடியாக நீக்க வல்லமை பெருங்காய நீருக்கு உண்டு.

* பெருங்காயம் கலந்த நீர் மிருதுவான செரிமானத்துக்கு வழி வகுக்கிறது. செரிமான அமைப்பில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. இதனால் அவற்றின் செயல்பாட்டை இயல்பாக்குவதோடு, குடல் அழற்சி நோய் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of hing water


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->