வயிற்று புண்ணை சரி செய்வது எப்படி?
pumpkin soup recipe
உணவுமுறை மாற்றத்தால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதனை வெண் பூசணியை சூப் வைத்து தினமும் குடித்து வருவதன் மூலம் சரிசெய்யலாம். அதனை எப்படி செய்வது என்பது குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்: பூசணிக்காய் துண்டுகள், வெண்ணெய், கொத்தமல்லி தழை,பால், மிளகுத்தூள், சீரகத்தூள், பூண்டு, சின்ன வெங்காயம், உப்பு.
செய்முறை:- "முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது வெண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்பு பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து சிறிது வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
பூசணிக்காய் நன்றாக வெந்த பின்பு ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து அதில் பால், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ஆரோக்கியமான வெண்பூசணி சூப் தயார்.