கோவை | தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு! முக்கிய அம்சங்கள் என்ன? - Seithipunal
Seithipunal


தி.மு.க சார்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை ''கோவை ரைசிங்'' என்ற தலைப்பில் வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார் வெளியிட்டுள்ளார். 

தி.மு.க வேட்பாளரின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள், கோவையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர், மாசு கட்டுப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

ஏரிகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும். 

மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். முதற்கட்ட பணிகள் உரிய கால நேரத்திற்குள் தொடங்கி முடிவடையும். சிறுவாணி, பில்லூர் ஆறுகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். 

விசைத்தறி வளர்ச்சி கவுன்சில் உருவாக்கப்பட்டு மின்சார செலவு போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். பம்ப்செட் மற்றும் உதிரிபாகத் தொழில்களில் உள்ள ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். 

கோழி பண்ணை விவசாயிகளின் தீவனம், மின்சாரம் இதர பிரச்சனைகள் தீர்க்கப்படும் போன்றவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore dmk election manifesto


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->