தருமபுரி யாருக்கு ? அடித்து ஆடும் சவுமியா அன்புமணி !! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 10வது தொகுதியாக தருமபுரி உள்ளது.தருமபுரி தொகுதியில் தருமபுரி,பாலக்கோடு,பென்னாகரம்,பாப்பிரெட்டிப்பட்டி,அரூர் (தனி) மற்றும் மேட்டூர் ஆகிய 6 சட்டமன்றதொகுதிகள் அடங்கி உள்ளது.

தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளர்கள் :

1. சவுமியா அன்புமணி - பாமக

2.ஆ.மணி - திமுக 

3.அசோகன் - அதிமுக  

 

என மும்முனை போட்டி நிலவுகிறது தருமபுரியில் , தேசிய ஜநாயக கூட்டணியில் பாமகவுக்கு காஞ்சிபுரம் ,தருமபுரி , விழுப்புரம் ,சேலம் ,கள்ளக்குறிச்சி ,திண்டுக்கல்,மயிலாடுதுறை ,கடலூர் ,அரக்கோணம் ,ஆரணி என  10 தொகுதிகள் ஒதுக்கியது பாஜக. 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , அன்புமணி போட்டியிடவில்லை.முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தருமபுரி வேட்பாளராக அரசாங்கம் அறிவிக்கப்பட்டார்.பின்னர்,வலுவான வேட்பாளராக அரசாங்கம் இல்லை என்றுகூறி அவருக்குப்பதிலாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாசுவின் மனைவியுமான திருமதி.சவுமியா அன்புமணியை தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவித்தது பாமக. இச்செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பாமக திமுகவை போல பலரும் விமர்சனம் செய்தனர்.ஆனால்,பாமக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக்கொண்டாடினார்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திமுகவை சேர்ந்த டாக்டர் செந்தில்குமாருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை . தருமபுரி திமுகவினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.தருமபுரி தொகுதி  திமுக வேட்பாளராக  ஆ.மணி அறிவிக்கப்பட்டார்.

அதிமுக சார்பில் தருமபுரி தொகுதி வேட்பாளராக அசோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் எடப்பாடி தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

யாருக்கு வெற்றி வாய்ப்பு :

தருமபுரி பாமகவின் கருதப்படுகிறது .ஏனென்றால் , நாடாளுமன்ற தொகுதியில் உலா 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதி பாமகவும்,3 தொகுதி அதிமுகவும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். வன்னியர்கள் மிக அடர்த்தியாக வாழும் மாவட்டம் தருமபுரி .தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை பாமகவும் (பாமக தலைவர் அன்புமணி தருமபுரி தொகுதியில் இருந்துதான் 2014ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார் என்பது குறிப்பிடதக்கது). 3 முறை திமுகவும் தலா இரண்டுமுறை அதிமுகவும் காங்கிரசும் வெற்றிப்பெற்றுள்ளது.

சமீபத்தில் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் முக.ஸ்டாலின் பாஜக கூட்டணியை விமரிசித்து பேசியது பெரும் சர்ச்சை ஆனது.

சவுமியா அன்புமணி எங்கு பிரச்சாரம் செய்யச்சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைப்பது மட்டுமல்லாமல்,சவுமியா அன்புமணியை கட்டியணைத்து தாய்மார்கள் தங்களது ஆதரவை தெரிவிக்கின்றனர்.சவுமியாக்கு ஆதரவாக அவரது மகள்கள் ஓட்டு கேட்டு கிராமம்கிராமாக செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது.

பாமக சார்பில் தருமபுரி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் , கலந்துகொண்டு பேசிய டாக்டர்.அன்புமணி அவர்கள் சவுமியா அன்புமணி பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பத்திரகாளியாக மாறிவிடுவார் என்று பேசினார்.கூட்டத்தின் நடுவே பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டத்திற்கு வந்தபோது,தொண்டர்கள் எழுப்பிய சத்தம் மைதானத்தை அதிரவைத்தது.

தற்போது உள்ள களநிலவரப்படி சவுமியா அன்புமணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்று அரசியல் விமர்ச்சகர்கள் கூறுகின்றனர் . தேர்தலுக்கு முன் வெற்றி வாய்ப்பு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று கூறப்படுகிறது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri for whom? Soumya who beats and dances !!


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->