ராணிப்பேட்டை || வாலாஜா ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க ஆர்ப்பாட்டம்.!  - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

மேலும், வாலாஜா ஒன்றிய செயலாளர் ரஜினி சக்கரவர்த்தி, வழக்கறிஞர் பிரிவு ஜானகிராமன், பசுமைத்தாயகம் பிரிவு பொறுப்பாளர் டிடி.  மகேந்திரன்,  வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புல்லட் ராதாகிருஷ்ணன், வாலாஜா நகர செயலாளர் பூக்கடை ஞானசேகரன், தேர்தல் பணிக்குழு தலைவர் தர்மேந்திரன், தலைமை நிலைய பேச்சாளர் தின புரட்சி ராஜேந்திரன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், தலைமை நிலைய பேச்சாளர் தின புரட்சி ராஜேந்திரன் மற்றும் மாவட்டச் செயலாளர் சரவணன் கண்டன உரையாற்றினார்கள். அதாவது, வீசி மோட்டூர்  ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக செயல்பட்டு வரும் வாசுதேவன், தலைவரை விட, அதிகாரிகளை விட  பல கோடிகள் சம்பாதித்து வசதி வாய்ப்போடு இருக்கிறார்.

18 வருடங்களாக ஒரே ஊராட்சியில் செயல்பட்டு வரும் இவர் மூலமாக, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவபிரகாசம் ஆகியோர் நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள். வன்னியர் மக்களின் துரோகியான வாசுதேவனை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம் ஆகியோர் 36 பஞ்சாயத்துகளிலும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள்.  காட்டேரி குப்பம் டேங்க் கட்டுமான பணி, வீசி மோட்டூர் சிமெண்ட் சாலை அமைத்தல், செங்காடு மோட்டூர் சுடுகாட்டு சிமெண்ட் சாலை, ஒழுகூர் பஞ்சாயத்தில் போர்வெல் மற்றும் டேங்க் கட்டுமான பணி, வன்னிவேடு மோட்டூரில் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் கட்டுமான பணி போன்ற பணிகளில் பல லட்சங்கள் ஊழல் செய்துள்ளனர்.

ஒரு சில இடங்களில் பணியை செய்யாமலேயே செய்து முடித்ததாக கணக்கு காட்டி உள்ளனர். அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதாக பட்டியலடங்கிய கவரை காண்பித்து பேசியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk peotest in ranipetai valaja


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->