இதனால் தான் மோடி நாகரிகமற்ற முறையில் பேசுகிறார் - செல்வப்பெருந்தகை தாக்கு! - Seithipunal
Seithipunal


சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 

வயநாடு தொகுதியில் கடந்த முறை 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி அடைந்தார். இந்த முறை 5 .50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். 

பிரதமர் நரேந்திர மோடி மக்களை பிரித்தாலும் கொள்கையில் இறங்கியுள்ளார். 100 இடங்களில் கூட பாஜக வெற்றி பெறாது என வயநாடு பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தோல்வி பயத்தால் கலவரத்தை ஏற்படுத்தவும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி நாகரிகமற்ற முறையில் பேசுகிறார். 

இதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவற்றை நம்பி தேர்தலை நிற்கின்றார். இதனால் பிரதமர் நரேந்திர மோடி மீது எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selvaperunthagai says Modi speaks uncivilized


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->