லாரி மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆம்னி பேருந்து: பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து கம்பம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து 34 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. 

ஆம்னி பேருந்தை கம்பம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இந்தப் பேருந்து இன்று அதிகாலை 5.40 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பால்பண்ணை அருகே சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த லாரி மீது ஆம்னி பேருந்து விழுந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்து முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

பேருந்தில் பயணம் செய்த பழனியம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். மேலும் 12 பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ஓட்டுனர் மற்றும் பயனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy near lorry Omni bus accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->