அதிகாலையிலேயே அதிர்ச்சி - பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது பப்புவா நியூ கினியா நாடு. இந்த நாட்டின் வடக்கு பகுதியில் இன்று காலை 6.56 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் நியூ பிரிட்டன் தீவின் கிம்பே பகுதியில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், 64 கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க நிலநடுக்க அறிவியலாளர்கள் தெரிவித்தனர். 

சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake in Papua New Guinea


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->