ஆப்பிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு திடீர் தடை: பின்னணியில் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிக்கும் நிறுவனம் இருமல் மருந்துகளை விற்பனை செய்து வந்தது. 

குறிப்பாக இந்த இருமல் மருந்தை, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இந்நிலையில் இந்த மருந்தை உட்கொண்ட குழந்தைகள் பலருக்கு உடல் நல பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து இரும்பல் மருந்தை சுகாதாரத்துறை அமைச்சகம் சோதனை செய்தது. 

அதில், இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகள் உடலில் நச்சுத்தன்மை உண்டாகி உடல் நலக் கோளாறு ஏற்படக்கூடும் என்பதும் தெரியவந்துள்ளது. 

இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா உள்ளிட்ட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்பனைக்கு கொடுத்த அனைத்து மருந்து பாட்டில்களையும் திரும்பப் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South African nations ban cough syrup


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->