பாப்கார்ன் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? அதில் இவ்வளவு நன்மைகளா? - Seithipunal
Seithipunal


பாப்கார்ன் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? அதில் இவ்வளவு நன்மைகளா? - பாப்கார்ன் குறித்து ஓர் சிறப்பு பார்வை :

இப்போதைய இளசுகள்  ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால்  திரையரங்கத்தை விட அங்கு இருக்கும் கேன்டீன் எப்படி இருக்கும் என்றுதான் பார்க்கின்றனர். அதிலும் அங்கு விற்கும் பாப்கார்னுக்கு  தனி மவுசுதான். அதிலும் படம் நன்றாக இருந்தாலும் இல்லையென்றாலும் பாப்கார்னை கொரித்துக்கொண்டே சினிமாவை பார்க்கும் பொது அதன் அனுபவமே அலாதிதான். சரி பாப்கார்ன் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது, அதன் வரலாறு என்ன என்பதை பாப்போம்.  

சோளப்பொரியை ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்கப் பழங்குடியினர் கண்டு பிடித்துள்ளனர். பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் அமெரிக்கக் கண்டத்துக்கு வந்த ஆங்கிலேயர், பழங்குடியினரிடம் இருந்து இதைப்பற்றி அறிந்தனர். இரண்டாம் உலகப்போருக்குமுன் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சியின்போது பிற உணவுகளைக் காட்டிலும் சோளப்பொரி மலிவாக இருந்ததால்,  இதன் பயன்பாடு வெகுவாகப் பரவியது.

 உலகப்போரின்போது அமெரிக்க ஒன்றியத்தில் சர்க்கரை விற்பனையின்மீது கட்டுப்பாடுகள் இருந்ததால்,  இனிப்பு தின்பண்டங்கள்  குறைவாகவே கிடைத்தன. அதனால் அமெரிக்க மக்கள் முன்பை விட மூன்று மடங்கு சோளப்பொரியை உண்ணத் தொடங்கினர்.  1885 ஆம் ஆண்டில் முதல் தானியங்கி பாப்கார்ன் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.  

இதனால்  தயாரிப்பது எளிதானது. நாளடைவில் இவற்றை சர்க்கஸ், திருவிழாக்கள், கண்காட்சிகள் மற்றும் பிற நிகழ்வுகளில் விற்க  தொடங்கியவுடன் ஒரு பிரபலமான ஸ்னாக்ஸ் ஆக மாறியது. ஆரம்பகாலத்தில் திரையரங்கிற்கு வெளியே சாலையோர வியாபாரிகளால் விற்கப்பட்டு வந்த பாப்கார்ன், இதன் மூலம் வரும் வரும் வருவாயை பார்த்து திரையரங்கிற்கு உள்ளேயே விற்க தொடங்கினர்.

இதில் கலோரியின் எண்ணிக்கை குறைவாக இருப்பதோடு, ஊட்டச்சத்தும் அடங்கியுள்ளதால் எடை குறைப்பதற்கான ஒரு ஸ்னாக்ஸ்  ஆக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து, பெனிலிக் அமிலம் அதிகமாக உள்ளதால், இது ஆக்சிஜனேற்றியாக  கருதப்படுகிறது. மேலும் சர்க்கரை நோய், இருதய நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஒரு அறுபத்தமான உணவாக பாப்கார்ன் கருதப்படுகிறது. இதில் உப்பு மற்றும் வெண்ணை சேர்க்காமல் அருந்துவதால் இரத்த அழுத்தத்தை குறைக்கும் என்று ஆராச்சியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special news about popcorn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->