வெளியானது விமால் நடிக்கும் ஓம் காளி ஜெய் காளி வெப் தொடரின் ட்ரெய்லர்..!
om kali jai kali web serias trailer released
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விமல். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விலங்கு' வெப் தொடர் மற்றும் 'சார்' என்ற திரைபடமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதைத் தொடர்ந்து, நடிகர் விமல் ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்துள்ளார்.
இதற்கு 'ஓம் காளி ஜெய் காளி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரில் குவீன்ஸி, புகஸ், கஞ்சா கறுப்பு, பாவ்னி ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராமு செல்லப்பா இயக்கியுள்ள இந்த வெப் தொடர் குலசேகரபட்டினம் தசர திருவிழா பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. ராமு செல்லப்பா, குமரவேல் திரைக்கதை எழுதியுள்ள இதற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த வெப் தொடர் வருகிற மார்ச் மாதம் 28-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் 'ஓம் காளி ஜெய் காளி' தொடரின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி உள்ளது.
English Summary
om kali jai kali web serias trailer released