ப்பா! செம்ம அழகு! தம்பி திருமணத்தில் நடனமாடி அசத்திய சாய் பல்லவி!!! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை சாய் பல்லவி, 'பிரேமம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.  இப்படம் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்று ஹிட்டானது. தமிழகத்தில் இந்தப் படம் 200 நாட்களுக்கு மேல் ஓடியது.

இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.  தனது முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து, தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

சாய் பல்லவி:

நடிகை சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான அமரன், தண்டேல் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்றதால் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகையாக சாய் பல்லவி மாறியுள்ளார்.  

மேலும் தற்போது இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் 'ராமாயணம்' படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் பல முன்னணி இயக்குநர்களும் சாய் பல்லவிக்கு கதை கூறி வருகின்றனர்.

தன் உறவினர் திருமணத்தில்:

இந்நிலையில்  சாய் பல்லவி, ஊட்டி கோத்தகிரியில் நடைபெற்ற தன் உறவினர் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்டு, அங்கு உறவினர்களுடன் 'படுகர்' நடனமாடி மகிழ்ந்தார்.

அழகிய கூந்தலுடன் நடனமாடி அனைவரையும் தன்வசம் ஈர்த்தார். மேலும் நீலநிற சேலையில் சாய் பல்லவி நடனமாடிய அந்த வீடியோவை பலரும்  தற்போது பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sai Pallavi danced amazingly at her cousin brothers wedding


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->