எலக்ட்ரிக் ஆட்டோ-வை அறிமுகம் செய்யும் பஜாஜ்..! - Seithipunal
Seithipunal


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் எலக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகம் செய்ய இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "உலகிலேயே மூன்று சக்கர வாகன உற்பத்தியில் பஜாஜ் ஆட்டோ தான் முதலிடத்தில் இருக்கிறது. 

தற்போது சந்தையில் 88 சதவீதம் தங்கள் கைவசம் இருக்கிறது. உலகமே பசுமையை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் அந்த பொறுப்பினை உணர்ந்து தங்களது நிறுவனமும் மின்சார வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக ஈ- ஆட்டோ மற்றும் ஈ- கார்கோ வாகனங்களில் தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்தியாவில் மின்சார ஆட்டோக்களுக்கான சந்தையை போலவே எலக்ட்ரிக் ஆட்டோ-க்களுக்கான சந்தையும் பிரகாசமாக உள்ளது. ஒரு மாதத்திற்கு தங்களது நிறுவனம் 50,000 முதல் 60,000 மின்சார ஆட்டோக்களை விற்பனை செய்கிறது.

இந்திய சந்தையில் தற்போது விற்கப்படும் ஈ- ரிக்‌ஷாக்கள் தரம் குறைவான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. எனவே தங்கள் நிறுவனம் ஈ- ரிக்‌ஷா உற்பத்தியில் ஈடுபட உள்ளது.

கூடுதலாக, ரூ.1 லட்சம் என்ற விலையில் சேட்டாக்கின் மின்சார வாகனத்தை இந்த மாதத்திலேயே அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 8 மின்சார வாகனங்கள் சேட்டாக் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bajaj company intro electric auto


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->