பரந்தூர் செல்லும் தளபதி விஜய்; பாதுகாப்பு கேட்டு கடிதம்..!
Vijay going to Paranthur
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு த.வெ.க., தலைவர்,நடிகர் விஜய் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. பரந்தூரில், விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
அந்த மக்களை பொங்கல் பண்டிகை முடிந்து சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு கேட்டு காஞ்சிபுரம் எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து உள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,யிடம் த.வெ.க., சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.19, 20 ஆகிய தேதிகளில் சந்திக்க வேண்டும் என த.வெ.க., அளித்த மனுவில் கூறப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.