விடாமுயற்சி' ரிலீஸ் தேதி..உறுதி செய்த  நடிகர் அஜித்குமார்! - Seithipunal
Seithipunal


 'விடாமுயற்சி' படம் ஜனவரி மாதமும், குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதமும் வெளியாகும் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். 

நடிகர் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற கார் ரேஸிங் அணியை தொடங்கி கடந்த சில மாதங்களாக அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.இந்தநிலையில் துபாயில் நடைபெற உள்ள கார் ரேஸில் நடிகர் அஜித் மற்றும் அவரது குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக   துபாய் சென்று தனது அணியினருடன் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டார்.

நடிகர் அஜித் ஒருபுறம் நடிப்பதில் மட்டுமல்லாமல் மறுபுறம் ரேஸிங்கிலும் கலக்கிவருகிறார். விடாமுயற்சி , குட் பேட் அக்லி ஆகிய படங்களை முடித்துவிட்டு கார் ரேஸிங்கில் பங்கேற்க துபாய் சென்றுள்ள அஜித் அடுத்த 9 மாதங்களுக்கு எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை எனவும் ரேஸிங்கில் தான் சாதிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், இன்று மாலை துபாயில் நடைபெறும் கார் ரேஸில் நடிகர் அஜித் மற்றும் அவரது குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.இதற்கிடையில், துபாய் ரேஸ் வளாகத்தில் பேட்டி ஒன்றில் 'பேசிய நடிகர் அஜித் விடாமுயற்சி' படத்தின் ரிலீஸை உறுதி செய்துள்ளார்.அப்போது அஜித் பேசும்போது அதாவது, "நான் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸாக உள்ளன என்றும் அதில் 'விடாமுயற்சி' படம் ஜனவரி மாதமும், குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதமும் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய நடிகர் அஜித்குமார் அங்கு திரண்டு வந்திருந்த ரசிகர்களை பார்த்து, அவர்களை நான் எல்லையின்றி நேசிக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். விடாமுயற்சி படம் வருகிற 23-ந் தேதி வெளியாகும் என்று அஜித் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perseverance Release Date Actor Ajith Kumar confirmed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->