பஜாஜ் பல்சர் 180 மாடல் நிறுத்தமா? திடீரென காணாமல் போன தகவல்.!
Bajaj Pulsar 180 discontinued
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் சீரிசில் முதன் முதலில் பல்சர் 180 மாடலை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு வாக்கில் பிஎஸ் 6 புகை விதிகள் அமலுக்கு வந்த போது முதல் முறையாக இந்த பல்சர் 180 மாடல் விற்பனை நிறுத்தப்பட்டது.
மேலும், பல்சர் 180F விற்பனையும் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் பல்சர் 180 மாடல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் 180 மாடல் விற்பனையை நிறுத்தி, தனது பஜாஜ் ஆட்டோ வலைதளத்தில் இருந்தும் பல்சர் 180 மாடல் நீக்கப்பட்டு விட்டது.
பல்சர் 180 மாடல் திடீரென நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பஜாஜ் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
பஜாஜ் பல்சர் 180 மாடலில் 178.6சிசி, சிங்கில் சிலிண்டர் மற்றும் ஏர் கூல்டு என்ஜின் கொண்டது. இந்த என்ஜின் 17 ஹெச்பி பவர் மற்றும் 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருந்தது.
பஜாஜ் பல்சர் 180 மாடலில் டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன், பிரேக்கிங்கிற்கு 280 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க், 230 மில்லிமீட்டர் பின்புற டிஸ்க், சிங்கில் சேனல் ஏபிஎஸ், ஹாலோஜன் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப் மற்றும் டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டிருந்தது.
English Summary
Bajaj Pulsar 180 discontinued