#BigBreaking :: கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு..!!
Commercial Gas cylinder price increased by Rs25
மத்திய அரசு இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலால் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தாமல் இருந்தது. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
![](https://img.seithipunal.com/media/IMG_20230101_085902-q9hf2.jpg)
கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் விலை மாற்றம் இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,892 என இருந்த நிலையில் ரூ. 25 உயர்த்தப்பட்டு ரூ.1,917 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1068.50 என நீடிக்கிறது.
English Summary
Commercial Gas cylinder price increased by Rs25