காம்தார் நகர் முதன்மை சாலை இன்று முதல் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை..!
SP Balasubramaniam Road Name Board Unveiled
தென்னிந்திய திரை உலகில் நீங்கா இடம் பிடித்த மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மிக முக்கியமானவர். அவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய குரல் இன்னும் னப்போடு பயணித்துக்கொண்டே இருக்கிறது.
அவரது நினைவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் வாழ்ந்த வீடு அமைந்துள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது மகன் சரண் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
![](https://img.seithipunal.com/media/sbv-uxj7z.jpg)
இந்நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
உதயநிதியுடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.என். நேரு உள்ளிட்டோர் மற்றும் எஸ்.பி.பி. குடும்பத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.
English Summary
SP Balasubramaniam Road Name Board Unveiled