கனா பட நடிகருக்கு ஜோடியாகும் மலையாள நடிகை..நடிகை யார் தெரியுமா?
Malayalam actress to pair with Kanaa actor Do you know who the actress is?
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'கனா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தர்ஷன் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் தர்ஷன் . அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'கனா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் தர்ஷன் . இதையடுத்து அதைத் தொடர்ந்து தும்பா படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார் நடிகர் தர்ஷன்.
தற்போது இவர், புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜவேல் இயக்க பிளே ஸ்மித் நிறுவனமும் சவுத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என்றும் இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக மலையாள நடிகை அர்ஷா பைஜு நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் காளி வெங்கட், வினோதினி, தீனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று காலை 11.11 மணிக்கும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Malayalam actress to pair with Kanaa actor Do you know who the actress is?