புதிய உச்சத்தை தொட்ட முட்டையின் விலை.. எவ்வளவு தெரியுமா..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை கோழிப்பண்ணை வரலாற்றில் இல்லாத அளவிற்கு இன்று உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த புத்தாண்டு முதல் கோழி முட்டையின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜன.1ம் தேதி 5 காசுகள் உயர்த்தப்பட்ட முட்டையின் விலை ரூ 5.50 விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜன.6ம் தேதி மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.55க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.65 விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் ஒரு முட்டையின் சில்லறை விலை ரூ.6 முதல் ரூ.6.5 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக ஹோட்டல்களில் முட்டை உணவுகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Egg price has reached a new hike in TamilNadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->