'விடாமுயற்சி' ஹாலிவூட் திரைப்படத்தின் ரீமேக்..? பதில் இப்போது சொல்ல முடியாது என்கிறார் மகிழ் திருமேனி..!
Vidamuyarchi a remake of the Hollywood film
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் - மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
'விடாமுயற்சி' படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா,சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் 'விடாமுயற்சி' திரைப்படமானது, 'பிரேக்டவுன்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று செய்திகள் வெளியானது. அதேசமயம் பிரேக் டவுன் படக்குழுவினர் விடாமுயற்சி படத்திற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக கோடிக்கணக்கில் பணம் கேட்டதனால்தான் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் பொங்கல் ரேஸிலிருந்து விலகியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் 'விடாமுயற்சி' படமானது பிப்ரவரி 06ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில், இயக்குனர் மகிழ் திருமேனியிடம், 'விடாமுயற்சி' படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மகிழ் திருமேனி, "இதற்கு பதில் நான் இப்போது சொல்ல முடியாது. ஆனால் இது என்னுடைய கதை இல்லை. கணவன் – மனைவி இடையிலான பயணமும் அதில் நடக்கும் சம்பவங்கள் தான் விடாமுயற்சி படத்தின் கதை. இதில் ஆக்சன், திரில்லர், சஸ்பென்ஸ் என அனைத்தும் அடங்கி இருக்கும். இது எதார்த்தத்திற்கு நெருக்கமாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
'விடாமுயற்சி' திரைப்படம் ரீமேக் என்று சொல்லப்படுகிற 'பிரேக்டவுன்' என்ற ஹாலிவுட் படம், 1997ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற படமாகும், இந்த 'பிரேக்டவுன்' படத்தில் கணவனும் மனைவியும் சாலை பயணத்தை மேற்கொள்கின்றனர். திடீரென மனைவி காணாமல் போக நாயகன் அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் கதையாக இருக்கும். அதே மாதிரியான கதைக்களத்தை 'விடாமுயற்சி'படமும் கொண்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
English Summary
Vidamuyarchi a remake of the Hollywood film