வெளியானது விடாமுயற்சி படத்தின் இரண்டாவது பாடல்.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் அஜித், துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்த்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பாடலான 'சவதீகா' மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. 

இந்த நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் இரண்டாவது பாடல் இன்று காலை 10.45 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, 'பத்திக்கிச்சி' என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்த மாதம் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vidamuyarchi movie second song released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->