#BREAKING :: தமிழகம் முழுவதும் முட்டை விலை அதிரடி உயர்வு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை கோழிப்பண்ணை வரலாற்றில் இல்லாத அளவிற்கு இன்று உயர்ந்துள்ளது. கடந்த புத்தாண்டு முதல் கோழி முட்டையின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த புத்தாண்டு அன்றே 5 காசுகள் உயர்ந்து வந்த முட்டை விலை ரூ. 5.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.55 என நிர்ணயம் செய்யப்பட்டது.

இதன் காரணமாக சென்னையில் ஒரு முட்டையின் சில்லறை விலை ரூ.5.75 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று நாமக்கல்லில் ஒரு கிலோ கறி கோழியின் கொள்முதல் விலை ரூ.5 குறைந்து ரூ.104 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடுத்தர மக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஓட்டல்களில் முட்டை உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Egg price hike across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->