#BigBreaking :: தமிழகம் முழுவதும் முட்டை விலை உயர்வு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


புத்தாண்டை முன்னிட்டு மத்திய அரசு நேற்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் விலையை ரூபாய் 25 உயர்த்தியது. இதன் மூலம் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் விலை ரூ.1,892 என இருந்து நிலையில் ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.1,917க்கு விற்பனை செய்யப்பட்டது. புத்தாண்டு அன்றே கேஸ் விலை உயர்வால் பொதுமக்களும் வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில் தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. தமிழக கோழி பண்ணையில் ஒரு முட்டை கொள்முதல் விலை ரூ. 5.50 என இருந்த நிலையில் 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.55 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் விலை உயர்ந்த நிலையில் இன்று முட்டையின் விலை உயர்வால் பொதுமக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Egg price new hike across Tamil Nadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->