மக்களே குட் நியூஸ் ! ஒரு வழியாக பெட்ரோல் டீசல் விலை குறைகிறது! எப்போது,எவ்ளோ விலை தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறையும் வாய்ப்புகள் குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட அறிவிப்பு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், பிரேசில் மற்றும் கயானா போன்ற நாடுகளில் இருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், எரிபொருள் விலைகளில் அதிக மாற்றங்கள் ஏற்படவில்லை.

2023 மார்ச் மாதத்தில் கடைசியாக லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலைகள், அதன் பிறகு 220 நாட்கள் விலை மாற்றம் இல்லாமல் ஒரே நிலைமையில் உள்ளன. இதனால் இந்திய மக்கள்மீது எரிபொருள் விலை உயர்வு பெரும் சுமையாய் இருந்தது என்றாலும், தற்போது விலைகள் குறையும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.

அந்தகாலத்தில் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக, எண்ணெய் விநியோகத்தில் குறைபாடுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரேசில், கயானா போன்ற நாடுகளின் நிலைத்துவமான எண்ணெய் விநியோகம், சர்வதேச சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் பாதுகாத்து வருகிறது. இதனால், எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடத்தில் வாழ்வாதாரத்தை சற்று சீரமைக்கும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Good news folks In one way the price of petrol and diesel is reduced Do you know when and how much


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->