தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்... தமிழக அரசுக்கு பறந்த அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "கடந்த 3 ½ ஆண்டுகளில் தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் 500 ஆக உள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் 600 மன மகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது. 

எப்.எல்.2 என்ற பெயரில் அரசின் உரிமம் பெற்றால், யார் வேண்டுமென்றாலும் மது விற்பனை செய்வதற்கு தி.மு.க. அரசு பல சலுகைகள் வழங்குகிறது. 

ஆனால், மனமகிழ் மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விநியோகிக்க வேண்டும் என்ற விதி தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டு, பெட்டிக்கடைகள் வைக்கக்கூட வசதி இல்லாத இடத்திலும் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள 1500 மனமகிழ் மன்றங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். 

கடந்த ஆண்டு தீபாவளிக்கு 467 கோடிக்கு விற்பனை, தற்போது கூடுதலாக இந்த ஆண்டு 20 விழுக்காடு விற்பனை வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், தீபாவளிக்கு 3 நாட்களுக்கு (30,31,01) மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali TASMAC Shop 3 day leave Request


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->