MG மோட்டார் இந்தியா: நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் EV கார்: பெரிய பேட்டரியோட வருகிறது MG Windsor EV அறிமுகம்!
MG Motor India Country best selling EV car MG Windsor EV launched with bigger battery
எம்ஜி மோட்டார் இந்தியா, வின்ட்சர் EV-யின் புதிய 50kWh பேட்டரி மாடலை 2025 ஏப்ரலில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாடல் 460 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் என்பதால், இந்திய எலக்ட்ரிக் கார் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MG Windsor EV - சந்தையில் அதிரடி வளர்ச்சி!
MG மோட்டாரின் வின்ட்சர் EV, இந்தியாவின் டாடா நெக்ஸான் EV, டாடா பஞ்ச் EV போன்ற பிரபல மாடல்களை கடந்து, 2024-ல் 21% சந்தைப் பங்கைக் கைப்பற்றியது. 2025 ஜனவரியில் மட்டும் 4,225 மாடல்கள் விற்கப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 251% அதிகரிப்பு!
50kWh பேட்டரி & அதிக ரேஞ்ச்!
புதிய 50kWh லித்தியம்-அயன் பேட்டரி, MG ZS EV-யில் பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்துடன் வரும். இதன் மூலம் ஒரே சார்ஜில் 460 கிமீ வரை பயணிக்க முடியும்.
- ஏசி சார்ஜர் மூலம் முழுவதுமாக சார்ஜ் செய்ய 16 மணி நேரம் ஆகலாம்.
- 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 0-80% சார்ஜ் 46 நிமிடங்களில் முடியும்.
- 0-100km/h வேகம் 8.6 விநாடிகளில் எட்டும்.
இந்திய சந்தைக்கு ADAS இல்லை?
இந்தோனேசிய சந்தையில் Wuling Cloud என அறிமுகமான இந்த மாடலில் ADAS (Advanced Driver Assistance System) தொழில்நுட்பம் உள்ளது. ஆனால், இந்திய மாடலில் அது சேர்க்கப்படாமிருக்க வாய்ப்பு உள்ளது.
MG Windsor EV விலை & எதிர்பார்ப்பு
தற்போது விற்பனையில் உள்ள 38kWh பேட்டரி மாடல் ₹13.50 - ₹15.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது. 50kWh பேட்டரி மாடலின் விலை ₹1-1.5 லட்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த Extended Range மாடல் வெளியானால், இந்திய EV சந்தையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்!
English Summary
MG Motor India Country best selling EV car MG Windsor EV launched with bigger battery