கம்பேக்னா இதுதான் கம்பேக்!தேனிசைத்தென்றல் தேவா இசையில் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் கொண்டாடிய வா வரலாம் வா திரைப்படம்! ஓடிடி வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது!
Vaa Varalaam Vaa movie tentkotta ott Streaming
எஸ்.பி.ஆரின் எஸ்ஜிஎஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், தேனிசைத்தென்றல் தேவா இசையில், இயக்குனர் எல்.ஜி ரவிச்சந்தர், எஸ்.பி.ஆர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு தியேட்டர்களில் வெளியாகி குடும்பங்கள் கொண்டாடிய திரைப்படம்தான் வா வரலாம் வா. இப்படத்தில் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்,ரெடின் கிங்ஸ்லி, மஹானா சஞ்சீவி, தீபா, மைம் கோபி, காயத்ரி ரெமா,சிங்கம்புலி, சரவண சுப்பையா, கிரேன் மனோகர், வையாபுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் உள்ள 75 சதவீத காமெடி நடிகர் ஒரே படத்தில் நடித்து வெற்றிபெற்ற படம் என்பது குறிப்பிடதக்கது.
80,90களில் ஆடாத கால்களையும் தனது இசையால் ஆடவைத்த தேனிசைத்தென்றல் தேவா இசையமைத்திருந்தார். குறிப்பாக, தேனிசைத்தென்றல் தேவா இசையில் இடம் பெற்றுள்ள 4 பாடல்களும் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கண்ணெதிரே தோன்றினாள் படத்தின் "சல்லோமியா", காதல் கோட்டை படத்தின் "கவலைப்படாதே சகோதரா" போன்ற பாடலுக்கு இணையாக இந்த படத்தில் "கானா எட்வின்" வரிகளில் "ஜில்லுஜில்லுனு ஏத்துரிய ஜிகிரிதாண்டா போல " என்ற பாடல் தற்போதுவரை பலரின் பேவரைட் பாடலாக உள்ளது.
வா வரலாம் வா திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். காமடியான வளம்வந்து கொண்டிருந்த ரெடின் கிங்ஸ்லி இப்படத்தின்மூலம் கலக்கல் காமெடியனாக உயர்ந்து படத்தின் கதாநாயகனாக உள்ளார்.படம் தொழுவே இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவுக்கு படத்தில் காமெடி காட்சிகள் நிறைந்துள்ளது. படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஆர் முதலபடத்திலே ஒருகாட்சிகளையும் சிறப்பாக இயக்கிருந்தார் என்பதை விட செதுக்கி இருந்தார் என்பது படம் பார்த்த ரசிகர் அனைவரின் கருத்து. நாயகியாக மஹானா சிறப்பாகவே நடித்துள்ளார். வில்லன் மைம் கோபி, தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.அதுமட்டுமில்லாமல் ரெடின் கிங்ஸ்லி ஒரு பக்கம் மைம் கோபியை கலாய்க்கும் காமடிகள் கலக்கலாக இருந்தது.
இத்திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பளாரானா எஸ்.பி.ஆர் ஒட்டுமொத்த தமிழ் சினிமா காமெடி பட்டாளங்களையும் இத்திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்த்தார், குறிப்பாக வையாபுரி வரும் காமெடி காட்சிகள் 90 காலகட்டத்தை நினைவுபடுத்தியது. எப்படி காமெடி நடிகர்கள் ஒரு சில காட்சிக்கு படத்தில் நடித்தார் என்ற கேள்விக்கு பதிலதிக்கும் விதமாக அவர்கள் வரும் காமெடி காட்சிகள் ரசிகர்களை வயடியாக்க செய்தது. குறிப்பாக, தீபா மாயாண்டி குடும்பம் படத்தில் எப்படி தனது நடிப்பால் அனைவரையும் அழவைத்தது அசத்திருப்பார். ஆனால், வா வரலாம் வா திரைப்படத்தில் கோவை சரளாவா மாறி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்தார். படம் முழுவதும் கதாநாயகி மஹானாயுடன் இணைந்து சீரியஸான காட்சிகளிலும் கவுண்டர் குடுத்து அசத்திருந்தார்.
இந்தநிலையில், வா வரலாம் வா திரைப்படம் தியேட்டர் வெற்றியை தொடர்ந்து டெண்ட்கோட்ட ஓடிடி தளத்தில் வெளியாகி மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தியேட்டர் படம் பார்க்கக்காத ரசிகர்கள் இப்படத்தை டெண்ட்கோட்ட ஓடிடியில் பார்த்து பாராட்டி வருகின்றனர். மேலும் பலர் வா வரலாம் வா பார்ட் 2 படத்துக்காக காத்துகொண்டு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Vaa Varalaam Vaa movie tentkotta ott Streaming