சாத்தானின் ஆட்சியில், 'வாடகை வாய்களை வைத்து அவதூறு பரப்புகிறீர்கள், சீமான் காட்டம்..! - Seithipunal
Seithipunal


 ''தமிழகத்தில் சாத்தானின் ஆட்சி நடக்கிறது, வாடகை வாய்களை வைத்து அவதூறு பரப்புகிறீர்கள். அதற்கு சம்பளம் கொடுக்கிறீர்கள்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இன்று சேலம் ஓமலூரில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசியல் என்றால் அழுத்தம் தான். இதில் வேறு ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லாத வழக்கு இது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்தை நாடியது நான் தான். இந்த வழக்கு முற்று பெற்றுவிட்டால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இருக்கிற வரை இழுத்து இழுத்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், 'தமிழகத்தில், சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அண்ணா பல்கலை விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து என்ன?' என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், 'கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் கொன்றவர்கள் வழக்கில் கைதானவர் 90 நாளில் வெளியில் வந்து சாராயம் சாய்ச்சினார், இது என்ன ஆட்சி சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? பல உயிர்களை பறிகொடுத்துவிட்டு 10 லட்சம் கொடுத்து சரி செய்தீர்கள். ஆனால் குற்றவாளி திருப்பி வந்து அதே தவறை செய்துள்ளார். பயமே இல்லை. இது சட்டத்தின் ஆட்சி இல்லை. சாத்தானின் ஆட்சி. என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், 'பள்ளிகளில் தினமும் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். தினமும் படுகொலை நடக்கிறது. எங்கு சட்டத்தின் ஆட்சியை நடக்கிறது.' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய சீமான் , 'நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயம் காட்டுகிறது. நான் வளர்ந்துவிடுவேன் என நினைக்கிறீர்கள். அச்சப்படுகிறீர்கள். நடுக்கம் வருவதால் அந்த பெண்ணை கூட்டி வந்து சண்டை போடுகிறீர்கள். வீரன் என்றால் நேருக்கு நேர் சண்டை போட வேண்டும். பெண்ணுக்கு பின்னால் நின்று சண்டை போடக்கூடாது.' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'வாடகை வாய்களை வைத்து அவதூறு பரப்புகிறீர்கள். அதற்கு சம்பளம் கொடுக்கிறீர்கள். இப்போது அந்த பெண் சென்றாலும் மீண்டும் 2026-இல் அழைத்து வருவார்கள். இதனால் தான் இந்த விவகாரத்தை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வழக்கை தொடர்ந்தேன். ஆனால், அது சரியாக வரவில்லை. சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளேன்.' இவ்வாறு சீமான் கூறினார்.

அத்துடன், சீமான் அவர்கள் போலீசார் முன்பு ஆஜராக விமானம் மூலம் திரும்பிய நிலையில், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் மீண்டும் கூறியதாவது: விசாரணைக்கு வருவதாக சொன்னேன். இரவு 08 மணிக்கு வரும்படி தெரிவித்தனர். சம்மனை ஒட்டும் போது தடுக்கவில்லை. எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி இருக்கலாம். வீட்டில் நான் இல்லை என்றால், சம்மனை எனது மனைவியிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம். எனக்கு சம்மன் கொடுக்காமல் கதவில் ஒட்டிச் சென்றது அநாகரிகம். என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் மேலும் பேசும் போது, 'கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை. என்னை திட்டமிட்டு அவமானப்படுத்த முயற்சி நடக்கிறது. நடிகை விஜயலட்சுமி புகாரில் ஜெயலலிதா, இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது, மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை வைத்து என்னையும், எனது குடும்பத்தையும் வன்கொடுமை செய்கின்றனர்.' என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Satan rule is taking place in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->