மீண்டும் அதிர்ச்சி.. தமிழகத்தில் நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு...!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் தமிழக முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் தனியார் பால் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசு மூலம் விற்கப்படும் ஆவின் பாலும் தனியார் பாலுக்கும் இடையே லிட்டருக்கு 20 ரூபாய் வித்தியாசம் இருந்து வருகிறது.

இதனால் ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட் விரைவில் விற்று தீர்ந்துவிடும். பொதுவாக தனியார் பால்பாக்கெட் விலை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலை உயர்த்தப்படுவது வழக்கம். கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில் விற்பனை விலை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனங்களான ஹரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பால் விலையை உயர்த்தி விட்டன. 

இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் தங்களது பால் மற்றும் தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வானது நாளை முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வர உள்ளது. இதுகுறித்து தனியார் பால் நிறுவன பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரித்ததால் பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private milk packet price hiked by Rs2 per litre in TN


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->